விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தர தனது விருதுகளை திருப்பி அனுப்பியது, பதவியை ராஜினாமா செய்தது என செய்துகொண்டிருக்க ஒருவர் உயிரையே துறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த சீக்கிய மதகுரு சந்த் ராம் சிங் (65) அரசின் கொடுமைக்கு எதிராக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சந்த் ராம் சிங் ஹரியானா மாநிலம் சிங்காராவைச் சேர்ந்தவர். பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட கடிதம் அவரது கையில் இருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.


0 கருத்துகள்