ஹாலிவுட்டில் ரூஸோ சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ இருவரும் இணைந்து சிவில் வார், அவெஞ்சர்ஸ் இனிஃபினிட்டி வார், எண்ட் கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர்கள். மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களில் இன்ஃபினிட்டி சாகா உள்ளிட்ட முக்கியமான நான்கு படங்களை இயக்கியபர்கள்.
தி க்ரே மேன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கும் இந்த படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த க்றிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த ராயன் காஸ்லிங்கும் நடிக்கின்றனர். தனுஷ் இந்த படத்தில் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கிறார்.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களில் இந்த படம் மிக அதிக பட்ஜெட் கொண்டது என்று கூறப்படுகிறது.
தனுஷ் 2016ல் ஒப்பந்தமான ’தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபஹிர்’ என்ற ஹாலிவுட் படம் 2019ல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஹிந்தியில் அறிமுகமாகி நடித்த ராஞ்சனாவின் இயக்குனர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.



0 கருத்துகள்