FLYING FRUITS
Muthalvan.I.S
Translation by J.Rakshana
Wrapper illustration - Haritha
ISBN - 978-93-95954-41-9
Pages: 36 | Rs. 60
நம் கிட்ஸ் பதிப்பகம்
’பறக்கும் பழங்கள்’
முதல்வன்
ஆங்கிலத்தில் : ரக்ஷனா
குழந்தைகளுக்கான கதைகள் என்பது குழந்தைகளுக்காக பெரியவர்கள் உருவாக்குவதா? அல்லது குழந்தைகளே உருவாக்குவதா? என்றோரு கேள்வி கேட்கப்படுவதுண்டு. இரண்டும் வெவ்வேறான வாசிப்பனுபவங்களைக் கொடுக்கக்கூடியது.
பெரியவர்கள், குழந்தைள் இருவரின் கற்பனைகளிலும் வித்தியாசங்களைப் புரிந்துணர முடியும். பயன்படுத்தக்கூடிய சொற்கள், சொல்லப்படும் கதைகளின் கூறுகள், அதன் வடிவம், உள்ளடக்கம் இப்படி எல்லாமே வித்தியாசமானவை.
’பறக்கும் பழங்கள்’ எனும் இந்த நூலில் உள்ள நான்கு கதைகளும் பால்மணம் மாறாத கதைகள் என்பதைச் சொல்கின்றன.
’பறக்கும் பழங்கள்’ என்கிற தலைப்புக் கதை ஒரு மரத்திலுள்ள பழங்கள் பறக்க ஆசைப்படுவதைக் கூறுகின்றன. ஆசைப்படுவதோடு நில்லாமல் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு வழியையும் சேர்த்துச் சொல்கின்றன.
குட்டிமான் என்கிற கதையில் புலிக்குகையில் மழைக்கு ஒதுங்கும் மான் அங்கு வரும் புலியை எப்படி எதிர்கொள்கிறது? என்பதைச் சொல்கிறது. புலி மானைச் சாப்பிட்டுவிடுமோ என்று நினைக்கும்போது புலி ’பசியில்லை’ என்கிறது. பெரியவர்களுக்கும் சேர்த்து ஒரு வாழ்வியல் முறையை அழுத்திச் சொல்கிறது இந்தக் கதை.
உறுப்புகள் மீண்ட கதை காற்றடித்துப் பறந்து செல்லும் உறுப்புகளைப் பற்றிப் பேசுகிறது.
ஈயும் வெளக்கமாறும் கதை வீடு கூட்டும்போது ஈயின் மேலே வெளக்கமாறு பட்டுவிட ஈக்குக் கோபம் வந்துவிடுகிறது. சண்டைபோட்டுக் கொண்ட இரண்டும் மீண்டும் எப்படி நண்பர்களாகின்றன? என்பதே ஈயும் வெளக்கமாறும் கதை.
இந்தக் கதைகளைக் கூறியவர் சென்னையைச் சேர்ந்த ஐந்து வயது நிரம்பிய முதல்வன். ஓவியங்கள் வரைதல், களிமண்ணில் உருவங்கள் செய்தல், பறவை பார்த்தல், உயிரினங்களின் செயல்பாடுகளை உற்றுக்கவனித்தல் ஆகியவற்றில் ஆர்வமுள்ள முதல்வன் தற்போது நான்காம் வகுப்புப் படிக்கிறார்.
இந்த நூலைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் ரக்ஷனா. ரக்ஷனா. ஓவியம், நடனம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர் தற்போது இந்த நூலின் மூலம் மொழிபெயர்ப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
இந்த நூலுக்கான ஓவியங்களைக் குழந்தைகளே வரைந்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு
TALKING CLOCK
Nivethitha I.S
Translation by Kiruthika
Inner illustration By Kayal & Muthalvan
Pages: 28 | Rs. 60
ISBN - 978-93-95954-75-4
பேசும் கடிகாரம்
நிவேதிதா. இ.செ.
ஆங்கிலத்தில் – கிருத்திகா
இப்போதெல்லாம் சுவர்க் கடிகாரங்களில் மணி பார்க்கப்படுவதில்லை. செல்போனிலேயே மணி பார்த்துக் கொள்வதால் கடிகாரம் ஓடாமல் நின்றாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இப்படி கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நான்கு கடிகாரங்கள் அந்த வீட்டில் தனியாக இருக்கும் தாத்தாவிடம் பேசுகின்றன. பின்னர் அந்தக் கடிகாரங்கள் என்ன செய்தன? தனிமையை மனிதர்களுக்கு மட்டுமானதா? என்பதையும் பேசுகிறது ‘பேசும் கடிகாரம்’ எனும் இந்தக் கதை.
மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது கூறிய நிவேதிதாவின் கதை இது. இவரது ‘ஆறு நண்பர்களின் கதை’ எனும் ஒரு கதைக்கு 50 குழந்தைகள் ஓவியப் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இவரது மற்றொரு நூல் ப்ளூட்டோ என் நண்பன் கதை விரைவில் வெளிவர இருக்கிறது. நிவேதிதா தற்போது ஆறாம் வகுப்புப் படித்துவருகிறார். புத்தக வாசிப்பிலும், கதை சொல்லலிலும் ஈடுபாடுமிக்கவர்.
தத்துவம் & சித்தாத்தம் : பிரபஞ்சன்
நேர்காணல் – இவள் பாரதி
விலை ரூ 100
பக்கம்: 60
ISBN : 978-93-95954-28-0
”உலக இலக்கியம் என்று நாம் அடிக்கடி சொல்கிறோம். அந்த உலக இலக்கியத்திற்குப் பக்கத்தில் வைப்பதற்கான படைப்புகளைப் பெண்களிடம் இருந்தும் இளைஞர்களிடம் இருந்தும்தான் பெற முடியும்” என்கிறார் பிரபஞ்சன்.
ஒரு நேர்காணல் என்பது ஓர் ஆளுமையின் பண்புகளையும், மன வெளிப்பாடுகளையும் இயல்பான போக்கில் அறிந்துகொள்வதற்கான ஓர் இலக்கிய வகைமை. அந்த வகையில் பிரபஞ்சன் 15 வருடங்களுக்கு முன் பகிர்ந்துகொண்ட பல விஷயங்கள் இன்றும் பொருந்திப் போகின்றன.
விருதுகள் பற்றிய கருத்துகள், வாசகப்பரப்பின் தன்மை, பெண்களின் எழுத்துலகம், ஊடகங்களின் செயல்பாடு என தொடங்கி வீரப்பன் முதல் விவேக் வரை தன் கருத்துக்களை எந்தச் சாயலுமின்றிக் கூறியிருக்கிறார்.
இதனை வாசிக்கும் ஆய்வு மாணவர்களுக்கு இது புதுமையாக இருப்பதோடு மட்டுமின்றி இலக்கியப் பரப்பில் இயங்குவோருக்கும் பிரபஞ்சனை மீள்பார்க்கக் கிடைக்கும் வாசிப்பனுவத்தை உருவாக்கக்கூடும்.
இதனைத் தொகுத்திருக்கும் இவள் பாரதி ஊடக உலகில் 15 ஆண்டுகால அனுபவமிக்கவர். கவிதைகள், சிறுகதைகள், சிறார் கதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்று இதுவரை 16 நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவரின் 17 வது நூல் இந்த நேர்காணல் தொகுப்பு.
YELLOW EGG
Periyasami Thooran
English Translation by Priya Jayakanth
Layout Designs: NAM Creatives
ISBN - 978-93-95954-06-8
First Edition - Dec 2023
Pages: 48 | Rs. 70
நம் கிட்ஸ் பதிப்பகம்
மஞ்சள் முட்டை
ஆங்கிலத்தில் : பிரியா ஜெயகாந்த்
சிறார் கதைகள் எழுதுவது என்பது அனைவராலும் முடியாத ஒன்று. இந்த சிறுகதை தொகுப்பை எழுதியவர் சிறார் எழுத்தாளரான பெரியசாமி தூரன் அவர்கள். நூற்றாண்டைக் கடந்தும் அனைவராலும் அறியப்பட்டிருப்பது அவரது குழந்தைப் பாடல்களுக்காக. என்பது அவரது மகத்தான சாதனை. தமிழில் முதல் பேரகராதியையும் கலைக் களஞ்சியத்தையும் உருவாக்கித் தமிழுக்கு தொண்டாற்றியவர். இந்த நூலில் உள்ள ஒவ்வொருக் கதையும் ஒரு கற்பிதத்தை குழந்தைகளுக்கு வழங்கும் விதமாக அமைந்திருக்கிறது.
ஒட்டகச்சிவிங்கி என்னும் விலங்கு இயல்பில் பேசும் திறன் அற்றது என்பதை ஊமை விலங்கு என்னும் கதை மூலம் எடுத்துரைக்கிறார்.
முத்துவின் முதல் திருட்டு என்னும் கதை, சிறு குழந்தைகள் எவ்வாறு தவறு செய்யத் தூண்டப்படுகிறார்கள் என்பதையும் நேர்மையாக இருந்தால் தமக்கான விருப்பம் நிறைவேறும் என்பதையும் விளக்குகிறது.
யாரடா அவன் கதை, படித்தவர்கள் மட்டுமே அறிவார்ந்தவர்கள். கிராமத்தில் இருப்பவர்கள் மூட நம்பிக்கை கொண்டவர்கள் என்ற தவறான கருத்தை உடைக்கும் விதமாக அமைகிறது.
படையெடுப்பு கதையும் மக்களின் அறியாமையை தெளிவுபடுத்துகிறது.
தாய் மொழி பேசாத நாய்க்குட்டி கதை குழந்தைகளிடம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாய்மொழிப் பற்றை எவ்வாறு வளர்ப்பது என்பதை விளக்குகிறது.
மஞ்சள் முட்டை கதை, ஒற்றுமையின் வலிமையை பறவைகளின் கூட்டுமுயற்சி மூலம் புரிய வைக்கிறது.
பலூன் பாப்பா கதையானது ஒரு பலூனை எவ்வாறு ஊதவேண்டும். எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்கிறது.
தண்டி மூக்கன் கதை மூலம் நம்மிடம் உள்ள சில குறைபாடுகளே சரியான முறையில் கையாளும்போது நமக்கான பலமாக மாறும் என்று நமக்கு புலப்படுகிறது.
இந்த நூலைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் பிரியா ஜெயகாந்த். அவர் கதை, கட்டுரை, நாவல் என எழுதிவருகிறார். இந்தக் கதையை மொழிபெயர்த்து, மொழிபெயர்ப்பிலும் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.
0 கருத்துகள்