23 வயது நிரம்பிய சித்ரா இன்று காலை 2.30க்கு ஷூட்டிங் முடித்து திரும்பியிருக்கிறார். காலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிப்பதற்கு முன் சரவணன் மீனாட்சி சீசன் 2 உள்ளிட்ட பல சீரியல்களில் கேரக்டர் ரோலில் நடித்து வந்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இவருக்கு அதிக ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வேலுநாச்சி என்கிற சீரியலில் வேநாச்சியாக நடித்தவர். சின்ன பாப்பா பெரிய பாப்பா என்கிற சன் டிவியின் பிரபல காமெடி சீரியலில் பெரிய பாப்பாவாக நடித்தவர். டார்லிங் டார்லிங் என்கிற ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியலில் நடித்தவர். மக்கள் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
மூன்று மாதங்களுக்கு முன் தொழிலதிபர் ஹேமந்த் ரவி என்பவருடன் நிச்சயதார்த்தமானது. இரு வீட்டு நபர்கள் மட்டுமே கலந்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டா அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டதாகவும், சித்ரா காமராஜ் என்ற பெயரை விஜே சித்து என்று மாற்றிக்கொண்டதாகவும் தெரிகிறது.
தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்தது. இந்த நிலையில் சின்னத் திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


0 கருத்துகள்