அக்குபங்சர் சிகிச்சையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FAPA) கல்ந்தாய்வுக் கூட்டம் சென்னையில் சேத்துப்பட்டு உலக பல்கலைக்கழக சேவை மைய அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பதினேழு அக்குபங்சர் சிகிச்சையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் 41 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இயங்கும் அக்குபங்சர் அமைப்புகளில் பெரும்பாலானவை கூடுவது இதுவே முதல்முறை.
கூட்டமைப்பின் தலைவராக சபீர் அப்துல்லா, செயலாளராக போஸ் முகமது மீரா, பொருளாளராக அப்துல் நாசர் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வையும், அமைப்பிற்கு ஓருவர் என்ற அடிப்படையில் 17 பேரைக் கொண்ட செயற்குழுத் தேர்வையும் கூட்டம் அங்கீகரித்தது. கூட்டமைப்பினை உடனடியாக தமிழ்நாடு அரசின் சங்கப்பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நடவடிக்கைகளைத் துவங்க முடிவு செய்யப்ப ட்டது.
ஒவ்வொரு சங்கத்திலும் உறுப்பினராக இருக்கும் அக்குபங்சர் சிகிச்சையாளர்களுக்கான பொது வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது, சட்ட ரீதியாக அக்குபங்சர் சிகிச்சைக்கான உரிமையை நிலுவையில் இருக்கும் வழக்குகளின் மூலம் நீதிமன்றங்களில் நிலைநாட்டுவது, மாநில அளவிலான அக்குபங்சர் கவுன்சிலை உருவாக்கும் கோரிக்கையோடு முதலமைச்சர், மருத்துவத் துறை அமைச்சர், மருத்துவத் துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்திப்பது, 2019 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட அக்குபங்சர் அங்கீகாரத்திற்கான அபெக்ஸ் கமிட்டியின் முடிவைப் பெற வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் இயங்கும் கூட்டமைப்பில் இன்னும் இணையாத அனைத்து அக்குபங்சர் சங்கங்களுக்கும் அழைப்பு விடுப்பது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற அக்குபங்சர் அமைப்புகள்:
1. All Tamilnadu Acupuncture & Alternative Medical Association (ATAMA)
2. Acupuncture Healers Federation (India) (Acu Healers)
3. Tamilnadu Acupuncture & Acupressure Practitioners Rights Organisation (TAAPRO)
4. Tamilnadu Acupuncture & External Therapists Association
5. Acupuncture Healers Association
6. Federation of Acupuncture Homes
7. Federation of Acupuncture and complementary Therapists (FACT)
8. Tamilnadu Acupuncture Council, Thanjavur.
9. Acupuncture practitioner and Teachers Association (APTA)
10. Association of Acupuncture and Natural Therapy (AANT)
11. National Acupuncture council
12. Acupuncturist's Forum of India
13. Traditional Hijama Acupuncture Acupressure Hakeem Allied Association
14. Arokkya acupuncture therapist Association
15. Acupuncture Drugless Practitioner's Association
16. Indian Bio-Acu Medical Association (IBAMA)
17. Classical Acupuncture Science Medical Association (CASMA)


0 கருத்துகள்