’பாம்பனுக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் 24 மணி நேரத்திற்கு மேலாக நிலை கொண்டிருக்கும் புரவி புயல் இன்னும் 24 மணி நேரத்திற்கு அந்த பகுதியில் நிலை கொண்டிருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்துக்கு இடையில் கரையைக் கடக்கும் புயல் நெல்லை அல்லது கன்னியாகுமரி அல்லது தென்காசி வழியாக மேற்கு நோக்கி நகரத்துவங்கும்.
இந்தப் படத்தில் காற்று வீசும் திசையைப் பாருங்கள். அந்த திசையில் காற்று வீசுவதால் சென்னை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை விடாமல் பெய்துவருகிறது. மேகங்களே இல்லாத வானமாக இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும்.
காற்றழுத்த தாழ்வு நிலையானது தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நகரத்துவங்கும்போது தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யும். அதே நேரத்தில் திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பாண்டிச்சேரி, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், விழுப்புரம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் அதிக மழைபெய்யக்கூடும். சென்னையிலும் மழை தொடரும்.
நிஷா புயலுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவைத் தந்த புயல் புரவி. இன்றும் நாளையும் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கு பிறகு ஒருவார கால இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது’ என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார்.



0 கருத்துகள்