30 வயதான Stas Reeflay தனது யூடியூப் சேனலில் ப்ராங்க் வீடியோக்களாக பதிவிட்டு வந்திருக்கிறார். அதில் கழிவறைத் தண்ணீரைக் குடிப்பது, குப்பைத் தொட்டியில் இருந்து மீதமான உணவுகளை எடுத்துத் திண்பது என இன்னும் என்னவெல்லாமே அவர் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு யூசர் 1300 டாலர் சேலஞ்ச் செய்ய தனது காதலியிடம் ப்ராங்க் செய்திருக்கிறார் இவர். அதாவது உறைய வைக்கும் பனியில் 15 நிமிடத்திற்கு மேல் பிகினியில் நிற்க வைத்திருக்கிறார். குளிர் தாங்காமல் நடுங்குவது, யூடியூபர் பேசுவது என லைவ் ஸ்டீரிமிலேயே இவை ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. பின்னர் 15 நிமிடம் தாமதமாக திறந்தபோது அந்த பெண்ணுக்கு இதயத் துடிப்பு நின்று போயிருந்திருக்கிறது. அவர் ஹபோதெர்மியாவில் இறந்திருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றத்திற்காக இவருக்கு குறைந்தபட்சம் இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன. யூடியூப் இதுபோலான வன்முறையான வீடியோக்களுக்கு இடமில்லை என்று அதை நீக்கிவிட்டு, வன்மையாகவும் கண்டித்திருக்கிறது.


0 கருத்துகள்