உதயகீர்த்திகாவின் ‘என் வழி விண்வெளி’ - தோழர். ஆர்.நல்லகண்ணு வெளியிட்டு சிறப்புரை



14.01.2023  சென்னை புத்தகக் கண்காட்சி, நம் பதிப்பகத்தின் (அரங்கு எண்-135) நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.  விண்வெளி வீரராவதற்கான தன் கனவை நோக்கிய பயணத்தை விவரிக்கும் உதயகீர்த்திகாவின் 'என் வழி விண்வெளி' நூலை தகைசால் தமிழர் தோழர். ஆர். நல்லக் கண்ணு அவர்கள் வெளியிட தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்த் சாய் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 

நூலை வெளியிட்டு பேசிய தோழர் ஆர்.நல்லக்கண்ணு, ‘இத்தனை முயற்சிகளை விடாமல் மேற்கொண்டு தன்னுடைய விண்வெளிக் கனவினை எட்டியிருக்கும் உதயகீர்த்திகாவுக்கும், நூலை வெளியிட்ட நம் பதிப்பகம் இவள் பாரதிக்கும் வாழ்த்துகள். உதயகீர்த்திகாவின் பெற்றோருக்கும் வாழ்த்துகள்’ என்றதுடன் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் கூறினார்.

இயக்குனர் வசந்த் சாய் பேசும்போது, ‘புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கும் உதயகீர்த்திகாவுக்கு வாழ்த்துகள். இவரைப் பார்க்கும்போது எனக்கு கல்பனா சாவ்லாவைப் பார்ப்பதுபோலத்தான் தோன்றுகிறது’ என்று வாழ்த்தினார்.

எழுத்தாளர் அ.உமர்பாரூக், ‘தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது மகிழ்வளிக்கிறது. எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் உதயகீர்த்திகாவை விண்வெளி வீரர் என்றுதான் அழைக்கிறோம். ஏனெனில் ஒரு விண்வெளி வீரர் எதிர்கொள்ளக்கூடிய அத்தனை சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார். அவரது கனவை நோக்கிய பயண அனுபவத்தை நூலாக வெளியிட்ட நம் பதிப்பகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்றார்.

நூலைப் பெற நம் பதிப்பகம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 
namtamilmedia@gmail.com





கருத்துரையிடுக

0 கருத்துகள்