தமிழி – இலக்கிய வெளியின் உலக புத்தக நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியாக 6 நூல்கள் அண்ணா நூலகத்தில் வெளியிடப்பட்டன. நன்செய் பிரசுரத்தின்
பதிப்பாளர் கவிஞர் தம்பி வரவேற்க, தமிழி இலக்கிய வெளி குறித்த நோக்கவுரை ஆற்றினார்
தடாகம் வெளியீட்டின் பதிப்பாளர் திரு.அமுதரசன்.
பேராசிரியர் வீ.அரசு அவர்கள் பதிப்பித்த ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள் – விரிவாக்கப்பட்ட பதிப்பு’ எனும் நன்செய் பதிப்பக நூலை எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் வெளியிட எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மகள், திருமிகு. தினகரி சொக்கலிங்கம் அவர்கள் முதல் பிரதியையும், சிறப்புப் பிரதியை இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு.விக்கிரமசிங்கே பெற்றுக்கொண்டனர்.
அடுத்து லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘கசாக்குகள்’ (தமிழில் -பேராசிரியர் நா. தர்மராஜன்) எனும் தமிழ் வெளி பதிப்பகத்தின் நூலை இயக்குனர் திரு. கரு.பழனியப்பன்,
வெளியிட்டார்.
‘புத்தரும் அவர் தம்மமும்’ - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய இந்தப் புத்தகத்தை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்
பேராசிரியர் டாக்டர் வீ. சித்தார்த்தா பெரியார்தாசன். இந்நூலை எழுத்தாளர் அழகிய பெரியவன்
வெளியிட புத்தகத்தின் பதிப்பாசிரியர்: திரு வளவன் பெரியார்தாசன் பெற்றுக்கொண்டார்.
தடாகம் வெளியிட்ட தொல்லியியல்
ஆய்வாளர், முனைவர் கோ. சசிகலா எழுதிய நூல் “அய்யன் சமூகம் – தோற்றமும் வளர்ச்சியும்” நூலை வீ.அரசு வெளியிட்டார்.
எழுத்தாளர் இவள் பாரதி எழுதிய ‘சுதந்திரம்’ எனும் நம் பதிப்பகத்தின் நூலினை கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் விவேகா வெளியிட இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர் இவள் பாரதியின் ’குட்டிமோச்சும்
உயிரினங்களும்’ எனும் நம் கிட்ஸ் பதிப்பகத்தின் சிறார் நாவலை சாகித்ய அகாதமியின் சிறார் இலக்கிய விருதாளர்
எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் வெளியிட எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் மற்றும்
இலங்கை எழுத்தாளர் பத்திரிகையாளர் விக்கிரமசிங்கே ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் மேனாள் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர் வீ.அரசு தலைமையேற்றார். எழுத்தாளர்கள் கோ. சசிகலா, வளவன் பெரியார்தாசன், இவள் பாரதி ஆகியோர் ஏற்புரை ஆற்றினர். தமிழ் வெளி பதிப்பகத்தின் கலாபன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொகுப்பாளர் திவ்யா நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
தடாகம், தமிழ்வெளி, நம்
பதிப்பகம், நன்செய்
பிரசுரம் ஆகிய நான்கு பதிப்பகங்களின் சார்பாக சிறப்பு அழைப்பாளர்களுக்கு எழுத்தாளர்
புதுமைப்பித்தன் உருவச்சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

0 கருத்துகள்