சென்னை புத்தகக்காட்சி ஜனவரி 3, 2024 இல் தொடங்குகிறது.

47ஆவது சென்னை புத்தகக்காட்சி தொடக்க விழா தேதி மாற்றம்  

 
47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 03/01/2024 வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 21/01/2024 வரை நடைபெற உள்ளது.

துவக்கவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல்  இரவு 8.30 மணி வரை நடைபெறும். 

வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். 
மொத்தம் 19 நாட்கள்  புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது.

இப்படிக்கு
கவிதா சேது சொக்கலிங்கம்
தலைவர்,  பபாசி

நாதம் கீதம் எஸ்.கே.முருகன்
செயலாளர், பபாசி  

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் 
பதிப்பாளர்கள் சங்கம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்